ஃபர்ஸ்ட் நைட்டில் வரும் பிரச்சனை!! யாமி கெளதமின் தூம் தாம் பட விமர்சனம்..
தூம் தாம்
இயக்குநர் ரிஷப் சேத் இயக்கத்தில் உருவாகியுள்ள தூம் தாம் திரைப்படத்தில் யாமி கெளதம், நடிகர் பிதீக் காந்தி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
பிப்ரவரி 14 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் 10 நிமிடம் கதை என்னவென்றே தெரியாமல் நகர்ந்தாலும் கலகலப்பான காமெடியுடன் சிரிப்பு வெடி சத்தத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தில் ஒரு அம்மாஞ்சி பையனுக்கும் அடக்கவுடக்கமான பெண்ணிற்கும் திருமணம் நடக்கிறது. முதலிரவில் இருவருக்கும் ஒரு பிரச்சனை வருகிறது. இருவரும் சேர்ந்து தீர்க்க வேண்டிய பிரச்சனை என்பதால் தேடி வந்த பிரச்சனையில் இருந்து இருவரும் தப்பினார்களா? இல்லையா? என்பது தான் கதை.
சுமாரான கதையாக இருந்தாலும் யாரையும் போரடிக்காமல் காதல், துரோகம் என நிமிடத்திற்கு நிமிடம் சிரித்துக்கொண்டே இருக்க வைக்கிறது தூம் தாம் படம். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் நடிகர்கள் அனைவரும் ஒரே ஆடையில் நடித்துள்ளனர்.
தூம் தாம் படம் படத்தின் ஒரு காமெடி புரிந்து சிரித்து முடிப்பதற்குள் அடுத்த காமெடி துவங்கிவிடுகிறது. நாயகியாக நடித்த யாமி கெளதம் நடிப்பு தூள் தான்.