விஜய் டிவி சம்பளத்தில் பெரிய பங்களா வாங்கினாரா அறந்தாங்கி நிஷா? உண்மை இதுதான்
Indian Actress
By Parthiban.A
சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகள் கோடிக்கணக்கில் செலவு செய்து பெரிய பங்களா கட்டுவது எல்லாம் சாதாரண விஷயம்.+
ஆனால் விஜய் டிவியில் காமெடியனாக இருந்துவரும் அறந்தாங்கி நிஷா சென்னையில் ஒரு பெரிய பங்களா கட்டி இருப்பதாக செய்தி இணையத்தில் பரவியது.
அந்த செய்தி உண்மை இல்லை என நிஷா இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு நிறைய பேரு எனக்கு வாழ்த்து சொன்னீங்க, நிறைய பேரு என்ன கிண்டல் பண்ணீங்க, இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்.. சத்தியமா சொல்றேன் இது என் வீட்டு வீடு இல்லங்கோ" என அவர் கூறி இருக்கிறார்.