25 கோடி வீடியோவுக்கும் எனக்கு சம்பந்தமில்லை.. நயன்தாரா திருமணத்தில் உண்மையை கூறிய இயக்குனர்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கடந்த ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் காத்திருந்த காதல் தற்போது கல்யாணத்தையும் முடித்துவிட்டனர்.
பிரம்மாண்ட திருமணம்
கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் பாதுகாப்புடன் நடைபெற்றது. திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸிடம் 25 கோடிக்கு விற்று சம்பாதித்துள்ளனர் நயன் - விக்கி.
திருமணமாகி இருவரும் ஹனிமூன் சென்று உற்சாகமாக இருக்கும் நிலையில் இன்னும் திருமணம் வீடியோக்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடாமல இருந்து வருகிறது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களை வெளியிட்டு பிரச்சனை ஏற்பட்டு சமரசம் செய்த நிலையில் ஏன் இன்னும் வெளியிடவில்லை என்று கேள்வி எழுந்து வருகிறது.
கெளதம் மேனன் விளக்கம்
இந்நிலையில் திருமணத்தினை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கி இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் நயன் தாராவின் திருமணத்தை நான் இயக்கவில்லை என்று குண்டைத் தூக்கிப்போட்டுள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன்.
நயன் திருமணத்தை தான் இயக்கவில்லை என்றும் அது ஒரு வதந்தி என்றும் தெரிவித்துள்ளார். நயன் தாராவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள், சிறு வயது முதல் சினிமாவில் நடந்த பாதைகளையும் தான் கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
நயன் தாரா பற்றி அந்த தொகுப்பிற்கு Nayanthara beyond the fairytale என்று பெயரிடப்பட்டு கூடிய சீக்கிரமே வெளியாகும் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏன் இன்னும் திருமணம் வீடியோவை வெளியிடாமல் இருக்கிறது என்றும் 25 கோடியில் ஏதாவது பிரச்சனை என்றும் கேள்வி எழுந்து வருகிறது.

