விஜய் முதுகில் குத்திய தில் ராஜு! பழிவாங்க தான் இப்படி பண்ணாரா தளபதி

Vijay Dil Raju Varisu
By Parthiban.A Jan 09, 2023 12:00 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் டாப் தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. அவர் விஜய்யை வைத்து வாரிசு படத்தை தயாரித்து இருக்கிறார். 200 கோடிக்கும் மேல் பட்ஜெட் செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.

தமிழில் படம் ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அஜித்தின் துணிவு ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் வாரிசு ரிலீஸ் ஆகிறது. முதலில் சோலோவாக ரிலீஸ் ஆகும் படம் பெரிய ஓப்பனிங் வசூல் பெறும், அதனால் இரண்டு படங்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஒரே நாளில் ரிலீஸ் செய்கிறார்கள்.

விஜய் முதுகில் குத்திய தில் ராஜு! பழிவாங்க தான் இப்படி பண்ணாரா தளபதி | Dil Raju Statement On Varisu Telugu Release

முதுகில் குத்திய தில் ராஜூ

அது மட்டுமின்றி வாரிசு தெலுங்கில் அதே நாளில் ரிலீஸ் ஆகவில்லை. சனிக்கிழமை ஜனவரி 14ம் தேதி தான் ரிலீஸ் ஆகும் என தில் ராஜு இன்று நடந்த பிரெஸ் மீட்டில் கூறி இருக்கிறார்.

ஐதராபாத்தில் நடந்த பிரெஸ் மீட்டில் விஜய் கலந்துகொள்ளவில்லை. ஏன் அவர் வரவில்லை என பத்ரிக்கையாளர்கள் கேட்க, '14ம் தேதி அவரை வர வைக்க முயற்சிக்கிறேன்' என கூறி தில் ராஜு சமாளித்தார்.

தெலுங்கு ஹீரோ படங்களுக்கு முன்னுரிமை, அதை முதலில் பாருங்க, அதற்காக தான் வாரிசு படத்தை 14ம் தேதி தள்ளி ரிலீஸ் செய்கிறேன் என தில் ராஜு அங்கு கூறி இருக்கிறார்.