சிம்புவால் நடுத்தெருவில் இருக்கேன்.. இயக்குனர் ஆவேசம்
நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் பத்து தல. தற்போது, மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்டு ஏராளமான படங்கள் டிராப் செய்யப்பட்டு இருக்கின்றன. அப்படி சிம்பு நடித்து டிராப் ஆன படம் கெட்டவன்.
இந்நிலையில், தற்போது, இந்த படத்தின் இயக்குனர் ஜிடி நந்து சிம்பு குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குனர் ஆவேசம்
அதில், " கெட்டவன் படத்தின்போது எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது, அப்போது சிம்பு எனக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்து உதவினார். ஆனால், உதவுவது போல் உதவி கெட்டவன் படத்தில் வரும் ஒரு வசனத்தை எடுத்து அவரின் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் வைத்து நாசமாக்கிவிட்டார்.
நான் இது குறித்து அவரிடம் பலமுறை எடுத்து கூறினேன். ஆனால் அவர் அதை காது கொடுத்து கேட்கவில்லை, என் படத்தின் வசனத்தை அவர் பயன்படுத்தியது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதனால் இப்போது நான் நடுத்தெருவில் இருக்கேன்” என்று கூறியுள்ளார்.