பேன்ட்டை முழங்கால் வர இழுனு சொல்லி அதை செய்தார்..சரினு சொல்லிட்டேன்..கசப்பான அனுபவத்தை சொன்ன சீரியல் நடிகை
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து அவர்களே பேட்டியில் பேசியுள்ளனர்.
இந்நிலையில் சினிமாவில் 15 மேற்பட்ட படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா மாரியப்பன். மேலும் இவர் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அர்ச்சனா மாரியப்பன் சினிமாவில் அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை கூறியுள்ளார்.
அதில் அவர், ஒரு பெரிய இயக்குனர், அந்த இயக்குனர் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. அந்த இயக்குனரின் படத்திற்காக ஆடிஷனுக்கு என்று இருந்தேன். என்னை அவர்கள் நர்ஸ் வேடத்தில் நடிக்க சொன்னார்கள். அப்போது உதவி இயக்குனர்கள் வெளியே சென்றுவிட்டனர். அந்த இயக்குனர் மட்டும் இருந்தார்.
அவர் என்னிடம் வந்து, உன் பேன்ட்டை முழங்கால் வரை இழு என்று சொன்னார். சரி என சொல்லி அது போன்று செய்தேன். அவ்வளவு தூக்கியதும் கொஞ்சம் மேலே தூக்கச் சொன்னார்.
எனக்கு அந்த சமயத்தில் தான் புரிந்தது அவர் தப்பான கண்ணோட்டத்தில் என்னிடம் பேசினார் என தெரியவந்தது. நான் சில காரணங்கள் கூறி அங்கு இருந்து வந்துவிட்டேன் என்று அர்ச்சனா மாரியப்பன்.