யாரா இருந்தா எனக்கென்ன!! பெரிய இயக்குநரை ஒரே வார்த்தையால் மூக்கை உடைத்த ஒல்லி நடிகை..
தமிழ் சினிமாவில் அனைவரும் கொண்டாடக்கூடிய பிரபல இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிகையை கமிட் செய்ய சென்றால் அவர் கதையை சொல்லுங்க என்று கேட்டு இயக்குநரை அப்செட்டாக்கி இருக்கிறார்.

ஒல்லி பெல்லி நடிகை
வெள்ளையாக, ஒள்ளியாக தேகம் கொண்ட அந்த நடிகை, சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரியளவில் வெற்றி பெற்றது. இதனையடுத்துப் இந்த நடிகைக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாக, சாதாரண குடும்பத்தை சேர்ந்த இந்த நடிகை டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தனது தனித்துவமான நடிப்பால் டாப் நடிகையாக வளர்ந்தார்.
தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வரும் அந்த ஒல்லி பெல்லி நடிகைக்கு பல படவாய்ப்புகள் வருகிறது. ஆனால் பணம் வருகிறது என்பதற்காக எந்த படத்திலும் கமிட்டாகாமல், நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறாராம்.

இயக்குநர் அப்செட்
கதையை உள்வாங்கி நடித்து வரும் இந்த நடிகைக்கு தமிழ், பாலிவுட்டே கொண்டாடும் இயக்குநரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாது. ஆனால் நடிகையோ பெரிய இயக்குநரிடம் கதை என்ன? அதைக்கேட்டுத்தான் நான் முடிவெடுப்பேன் என்று கதையை கூறும்படி கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் அந்த பெரிய இயக்குநர் பட வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கி வரும் சமயத்தில், ஒல்லி நடிகை கதையை கூறுங்கள் என்று கேட்டதால் பெரிய இயக்குநர் மிகவும் அப்செட்டாகியுள்ளாரா. இதனால் பெரிய இயக்குநர் வேறொரு நடிகையிடம் பேச்சுவார்த்தை செய்து வருகிறாராம்.