திருமணமாகி ஆர்யனை பிரிந்தேனா? சீரியல் நடிகை ஷபானாவின் ரியாக்ஷன் இதுதான்!
செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷபானா ஷாஜஹான். மக்கள் மனதில் பல ஆண்டுகளாக இடம் பிடித்து வந்த ஷபானா பாக்யலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
கூறிய அடுத்த சில வாரங்களிலேயே ஷபானா - ஆர்யன் திருமணம் நடைபெற்றது. சீரியல் நண்பர்கள் உதவியுடன் குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்திருந்தனர். இந்நிலையில் ஹனிமூனிற்கு சென்று ஒரே நாளில் திரும்பிய ஜோடிகளால் சில வதந்திகள் பரவியது.
ஏற்கனவே ஷபானா காதலிக்கும் போது ஆர்யன் குடும்பத்தினர் ஷபானாவையும் நடிகை ரேஷ்மாவையும் மிரட்டி வந்ததாக செய்திகள் பரவியது. இந்நிலையில் ஆர்யன் - ஷபானாவிற்கு இடையில் சில சலசலப்பு ஏற்பட்டதாகவும் பிரியவுள்ளதாகவும் செய்திகள் வைரலானது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சேலையணிந்து நெற்றியில் பொட்டுடன் ஷபானா ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு மாலில் எடுத்த புகைப்படத்தோடு எடுத்தது ஆர்யன் என்று குறிப்பிட்டுள்ளார் ஷபானா.
