யார் உண்மையான தலைவர்!! ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள் திவ்யா..
திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், திமுகவில் இணைந்தப்பின் தொடர்ந்து பல மேடைகளில் விஜய்யையும், அவரது தமிழக வெற்றிக் கழகத்தையும் விமர்சித்து பேசி வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் சென்னையில் நடந்த அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவன விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியிருக்கிறார் திவ்யா.

அதில் கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டியபடி, நடிகை ரம்யா கிருஷ்ணனை உதாராணமாக வைத்து தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ரம்யா கிருஷ்ணன்
நம் துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் அருமையான தலைவர். ஏனென்றால், மேடையில் நின்று பாட்டுபாடுவது தலைவர் கிடையாது, மக்களுக்காக பாடுபடுபவர் தன் தலைவர்.

திரையில் வந்து டான்ஸ் ஆடுபவர் தலைவர் கிடையாது, தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர். எவன் செத்தா எனக்கென்ன என்று படையப்பாவில் வரும் ரம்யா கிருஷ்ணன் மேடம் மாதிரி ஆபிஸ் ரூமில் உட்கார்ந்து கொண்டு லாஜிக்கே இல்லாமல் ஸ்லோ மோஷன்ல பேசுறவர் தலைவர் கிடையாது.
துபாய் பயணத்தை கேன்சல் பண்ணிவிட்டு மக்களுக்காக ஓடி வந்தாரு பாருங்க அவர்தான் உண்மையான தலைவர் என்று பேசியுள்ளார்.