உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்!! துரந்தர் 2 படத்தை பார்த்து விளாசிய நடிகை திவ்யா ஸ்பந்தனா.
துரந்தர் 2
இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில், நடிகர் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடிப்பில் பிரமாண்டமான முறையில் உருவாகி மார்ச் 19 ஆம் தேதி ரிலீஸாயகியுள்ள படம் துரந்தார் 2. ஏற்கனவே முதல் பாகம் ரிலீஸாக 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனையடுத்து துரந்தர் 2 படமும் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான ரம்யா என்கிற திவ்யா ஸ்தந்தனா, துரந்தர் 2 படத்தை பற்றிய தன்னுடைய விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
திவ்யா ஸ்பந்தனா
அதில், இப்போதுதான் துரந்தர் 2 படம் பார்த்தேன், அடடா, ஒரு நல்ல படத்தை எப்படி பொறுமையை சோதிக்கும் வகையில் உருவாக்குவது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். முடிவில்லாத அர்த்தமில்லாத காட்சிகள் இருப்பதால், ஒரு மிகவும் சலிப்பான பாடப்புத்தகத்தை படிப்பதுபோல் இருக்கிறது.
படம் பார்க்க பார்க்க ஒருக்கட்டத்தில் உங்கள் மூளை சோர்வடைந்து, உங்கள் கண் முன்னே அரங்கேறும் கொடூரத்தை பார்த்து, சரிக்கத் தொடங்கிவிடுவீர்கள். இப்படத்தை நீங்கள் உண்மையிலேயே இதைப்பார்க்க விரும்பினால், உங்கள்நல்லதுக்கு சொல்கிறேன், திரையங்கில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள்.

முழுக்க முழுக்க மொபைலில் பார்த்து கொண்டே சில படங்களை கடமைக்கு பார்ப்போம் அல்லவா அப்படியான படம் தான். இதிலிருந்து தம்பிக்க ஒரு நொடியில் நமக்கு வழிவிடும் ஒரு ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்ப்பதே நல்லது என நான் நினைக்கிறேன்.
ரன்வீர் பாடத்தை தாங்கி பிடிக்கிறார் என்று கூறுகிறார்கள், அவர் சரியா எதை தாங்கி பிடிக்கிறார் என்று கூறுங்கள். எனக்கு அவருடைய முடி மட்டுமே தெரிந்த்து, முதல் பாகத்தில் அவருடைய முடிக்கு ஒரு தனித்துவம், ஈர்ப்பு, குணாதிசயம் இருந்தது. அவரது நீண்ட முடி சுமா இருக்கிறது, எல்லாவற்றுக்கும் இடையூறாக இருக்கிறது.

அந்த வன்முறை, இது ஒரு படமே அல்ல. இது அடிப்படையில் கையில் இருக்கும் எந்த பொருளையும் கொண்டு எவ்வளவு படைப்பாற்றலுடன் வன்முறையை வெளிப்படுத்தலாம் என்பதற்கு ஒரு காட்சி வழிகாட்டியாக இருக்கிறதா?(அப்படி இருக்கவே கூடாது). ஆஸ்கரை மறந்துவிடுங்கள், நோபல் பரிசு வரப்போகிறது.
சுருக்கமாக சொன்னால், துரந்தர் 2 ஒரு மிகப்பெரிய ஏமாற்றம், அதிகபட்சம் ஒரு தூக்கத்தை வரவைக்கும் காமெடி படம். முதல் பாகம் உங்களை ஆர்ப்பரிக்க வைத்திருந்தால், இந்த பாகம் ஏன் துரந்தர் 2 ஏ? என்று உங்களை கேள்விக்கேட்க வைக்கும். ரன்வீர், நீங்கள் இதைவிட நன்றாக நடிக்க கூடியார், ஆதித்ய தார் உங்கள் தேசப்பற்றும் பிரச்சாரமும் பழங்கதையாகிவிட்டது. அதிலிருந்து வெளியே வாருங்கள் என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார் நடிகை திவ்யா.