இரு எழுத்து நடிகை, அந்த நடிகரை மணமுடிக்க ஆசைப்பட்டு? அதுக்குள்ள 3 முறை மாடிக்கு வந்த பிக் ஹீரோ.. பிரபலம்...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஹீரா ராஜகோபால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த ஹீரா, இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதீலீலாவதி, காதல் கோட்ட, அவ்வை சண்முகி, உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். சுயம்வரம் படத்திற்கு பின் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்க என்ன காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சபிதா ஜோசப்
நடிகை ஹீரா குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியொன்றில், ஹீராவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தவர். மாடலிங் துறையில் இருந்து விளம்பரங்களில் நடித்த ஹீராவை இயக்குநர் சுபாஷ் கய் பார்த்து நடிக்க விருப்பமாக என்று கேட்டதற்கு ஹீரா மறுத்துள்ளார். பின் இதயம் படத்தில் இயக்குநர் கதிர் நடிக்க சம்மதம் வாங்கி நடிக்க வைத்தார். இதன்பின் ஹீரா சரத்குமாருடன் 4 படங்களில் இணைந்து நடித்த போது, ஹீராவை விழுந்து விழுந்து சரத்குமார் காதலித்தார்.
நடிகர்களுடன் காதல்
ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது ஹீராவை பேட்டி எடுத்திருந்தார். அப்போது சரத்குமார் 3 முறை வந்து பேட்டி முடியலயா என்று கேட்டார். அதன்பின் ஹீரா ஒருசில நடிகர்களுடன் நெருக்கமாக நடித்ததால் சரத்குமார் சில கண்டீஷன் போட்டதால் இருவரும் பிரிந்தனர். பின் ஹீராவுடன் அஜித் ஹீரோவாக நடித்தபோது 10வது படித்துள்ளார்.
இருவரும் ஆங்கிலம் பேசுவதால் காதலிக்கவும் ஆரம்பித்தனர். திருமணம் செய்யலாம் என்ற முடிவெடுத்து அஜித் ஹீராவின் அம்மாவிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால் இந்த திருமணத்திற்கு ஹீரா பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்த விஷயத்தை ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் கொண்டு செல்ல, ஹீராவை அழைத்து அந்த தயாரிப்பாளர், அஜித்திடம் ஒதுங்கி செல்லுமாறு காட்டமாக சொல்லியிருக்கிறார். இதை ஹீரா எதிர்பார்க்கவில்லை, காதல் தோல்வியின் வடு ஹீராவுக்கு நிறைய இருந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
நான் விரும்பிய பெண் என்னை விரும்பியதில்லை, என்னை விரும்பிய பெண் என்னை அடைந்ததில்லை என்று கண்ணதாசன் சொல்வார். அதேபோல் சரத்குமார் விரும்பிய ஹீரா சரத்துக்கு கிடைக்கவில்லை, ஹீரா விரும்பிய அஜித், ஹீராவுக்கு கிடைக்கவில்லை என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.