சம்யுக்தாவின் 2-ஆம் கணவரின் முதல் மனைவி ஒரு நடிகையா!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
அனிருதா - சம்யுக்தா
நடிகை சம்யுக்தா பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்துடன் நெருக்கமாக இருந்து வந்தார். விரைவில் இருவருக்கும் திருமணம் என்ற பேச்சுக்கள் எழுந்து வந்தது.

இதுகுறித்து சம்யுக்தாவும் அனிருதாவும் எதுவும் கூறாமல் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் சாதாரண முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இருவருக்கும் இந்த திருமணம் 2வது என்பதால் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சம்யுக்தாவின் 2ஆம் கணவருமான அனிருதா ஸ்ரீகாந்தின் முதல் மனைவி யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
ஆர்த்தி வெங்கடேஷ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி அனிருதா, மாடலிங் துறையில் இருந்த ஆர்த்தி வெங்கடேஷ் என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.

ஆர்த்தி வெங்கடேஷ், பல சர்வதேச பிராண்டுகளுக்கு மாடலாக இருந்துள்ளார். இவர் 2018ல் வெளியான சோலோ படத்தில் நடிகையாக அறிமுகமாகினார். படம் எதிர்ப்பார்த்தபடி நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் ஆர்த்தியின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

2018ல் அனிருதாவுக்கும் ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இருவரும் எந்த காரணத்திற்காக பிர்நிதார்கள் என்ற காரணம் வெளியில் வரவில்லை.

விவாகரத்துக்கு பின் ஆர்த்தி வெங்கடேஷ் தன்னுடைய மாடலிங் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். மாடலாகவும், நடிகையாகவும் தனக்கென ஒரு பாதையை அவர் வகுத்து வருகிறார். தற்போது வெளிநாட்டு அவுட்டிங்கில் என் ஜாய் செய்து வருகிறார் ஆர்த்தி வெங்கடேஷ்.