விஜய் டிவியிடம் கெஞ்சிய RJ பாலாஜி! அந்த படத்தை மீண்டும் போடாதீங்க ப்ளீஸ்
நடிகர் RJ பாலாஜி தற்போது கோலிவுட்டில் நடிகராக மற்றும் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அவர் தற்போது வீட்ல விசேஷம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
அந்த படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற Badhaai Ho என்ற படத்தின் ரீமேக் தான். வீட்ல விசேஷம் படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் வரும் 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் RJ பாலாஜி ட்விட்டரில் தன்னை பற்றி வந்த கமெண்டுகளுக்கு பதில் அளித்து இருகிறார்.
"Badhaai Ho படம் ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் தமிழில் டப் ஆகி இருக்கிறது, இதை எதற்க்கு இப்போது ரீமேக் செய்றீங்க?" என நெட்டிசன் ஒருவர்கேட்டிருக்கிறார்.
அந்த படத்தை விஜய் டிவியே இரண்டு முறை ஒளிபரப்பி இருக்கிறது. விஜய் டிவியிடம் கெஞ்சி அதை மீண்டும் ஒளிபரப்ப விடாமல் செய்திருக்கிறோம் என பாலாஜி கூறி இருக்கிறார்.
கழுவி கழுவி tweets ??#VeetlaVishesham 2nd single #PaapaPaattu from tonight !!! ?❤️#VeetlaVisheshamFromJune17 pic.twitter.com/B0ViCCo87G
— RJ Balaji (@RJ_Balaji) June 7, 2022