10 ஆண்டுகளாக மறைத்து வைத்த உண்மை! என்னையும் என் மனைவியையும் அசிங்கப்படுத்தினார்கள்! சிஎஸ்கே வீரர்..

csk ipl chennai super kings du plessis msdhoni
By Edward May 19, 2021 11:55 AM GMT
Edward

Edward

Report

கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாம் அலை அதிதீவிரமாக இருந்து வருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல் படுத்தி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பல துறையை சேர்ந்தவர்கள் அதனால் அன்றாட வாழ்க்கையும் இழந்து வருகிறார்கள். அந்தவகையில் கடந்த வருடம் அரபு நாடுகளில் நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டி இந்த வருடம் இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

ஆனால், விளையாட்டு வீரர்களையும் கொரோனா விட்டு வைக்காது ஒருசிலரிடன் அறிகுறிகள் ஏற்பட ஐபிஎல் போட்டியை தற்காலிகத்திற்கு ஒதுக்கி வைத்துள்ளது கிரிக்கெட் அமைப்பு. இதனால் அனைத்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு வீரர்களும் அவர்களின் வீட்டிற்கு திரும்ப அனுப்பி வைத்தனர். அந்தவகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக களமிரங்கிய தென்னாப்பிரிகா வீரர் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் சமீபத்தில் பேட்டியொன்றை கொடுத்துள்ளார்.

அதில் தன்னையும் தன் மனைவியை ஒருசிலர் அசிங்கமாக பேசி அவமதித்தனர் என்று 10 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை கூறியுள்ளார். அதாவது, 2011 உலககோப்பை போட்டியில் தென்னாப்பிரிகா - நியூசிலாந்து அணிகள் மோதுன போது நியூசிலாந்து அணி எங்களுக்கு 221 ரன்கல் இலக்காக கொடுத்தது. அந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் 121 ரன்னிற்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் 36 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இக்கட்டான சூழலில் இருந்த அணியை மீட்கமுடியாமல் இருந்தபோது அவர் அவுட் ஆனது பெரிய இழப்பாக அமைந்தது. அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. மேலும் டூ பிளெஸ்ஸிஸ் நியூசிலாந்து வீரரை தள்ளிவிட்டதால் 50% அபராதமும் செலுத்தினார். அந்த போட்டி முடிந்த பிறகு எனக்கும் தன் மனைவிக்கும் அதிகமாக கொலை மிரட்டல்களும் சமுகவலைத்தளங்களில் அசிங்கமான விமர்சனங்களையும் சந்தித்தேன்.

இதனால் எனக்கு வேதனையாக இருந்தது. அந்த அளவிற்கு மோசமான நிலையில் தள்ளப்பட்டேன் நான் என்று கூறியிருந்தார். அதையெல்லாம் கடந்து தற்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.