ஒரு அம்மா புருஷன் வேணா, குழந்தை வேணுங்குது.. ஒரு அம்மா கம்ருதீனை மகனு சொல்லுது!! நெட்டிசன்கள் புலம்பல்...
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிலையில், 80 நாட்களாகியும் எந்தவொரு ஸ்வாரஷ்யமான சம்பவமும் நடக்கவில்லையே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், அரோராவின் தோழி வீட்டிற்குள் வந்து அவருக்கு அட்வைஸ் செய்தார். இதனையடுத்து போட்டியாளர்களுக்கு இடையேயான உரையாடல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

புருஷன் வேண்டா
அதில் அரோரா, எனக்கும் குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் புருஷன் வேண்டாம், புருஷன் இல்லாமல் குழந்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும், குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடியும் என்றால்கூட நான் அதை செய்ய தயார் என்று கூறினார்.
பாடகி சுசித்ரா
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, பாடகி சுசித்ரா இன்ஸ்டாகிராமில், கம்ருதீனை மகனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார். நீங்க ரொம்ப நல்ல ஓவியம் வரைகிறீர்கள், நம்பர் 1 ஓவியராவதற்கான அனைத்து திறமைகளும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் ஓவியம் வரைவதை பார்த்து நான் வியந்துவிட்டேன். உங்களை நான் மகனாக தத்தெடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று பேசியிருக்கிறார். இதைபார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கன்றாவியையே எங்களால் பார்க்க முடியவில்லை, இதில் ஒது வேறையா என்று புலம்பி வருகிறார்கள்.