தொடர்ந்து மூன்று 100 கோடி ரூபாய் வசூல் படங்கள்.. சாதனை படைக்கும் பிரதீப் ரங்கநாதன்

Pradeep Ranganathan Mamitha Baiju Dude
By Kathick Oct 27, 2025 04:30 AM GMT
Report

லவ் டுடே மற்றும் டிராகன் என இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வெளிவந்த Dude படமும் ரூ. 100 கோடி வசூல் செய்யுமா என எதிர்பார்க்கப்பட்டது. அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

தொடர்ந்து மூன்று 100 கோடி ரூபாய் வசூல் படங்கள்.. சாதனை படைக்கும் பிரதீப் ரங்கநாதன் | Dude 10 Days Worldwide Box Office

இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் சர்ச்சையில் சிக்கினாலும் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

இந்த நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் Dude திரைப்படம் உலகளவில் ரூ. 107 கோடி வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் தனது முதல் மூன்று திரைப்படங்களிலேயே தொடர்ந்து ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற சாதனையை பிரதீப் படைத்துள்ளார்.