சிவாஜி கணேசனையே அசிங்கப்படுத்திய பிரபல நடிகை! மன்னிப்பு கேட்க வற்புறுத்திய படக்குழுவினர்..

Sivaji Ganesan Vennira Aadai Nirmala
By Edward Jul 14, 2022 11:53 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் பெருமைக்குரியவராகவும் நடிப்பின் திலகம் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமாவில் அவருக்கு இருக்கிற மரியாதை மிகப்பெரியளவில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி பிரபல நடிகை ஒருவர் சிவாஜி கணேசனை மதிக்காமல் அவமானப்படுத்திய தகவல் வெளியாகியுள்ளது. 70களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகையில் ஒருவர் வெண்ணிற ஆடை நிர்மாலா.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் சிவாஜி சாரை சங்கடப்படுத்தியதை பற்றி கூறியுள்ளார். சிவகாமியின் சபதம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்து வந்தேன். அதில் சிவாஜி சார் நடிப்பில் கோயம்புத்தூரில் ஷூட்டிங் நடைபெற்று இருந்தது. நான் வேறொரு படத்தில் ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்தேன். சிவகாமியின் சபதம் ஷூட்டிங்கிற்காக ஊட்டி சூட்டினை முடித்துவிட்டு மேட்டுப்பாளையம் வருவதற்குள் ரயில் சென்று விட்டது.

சிவாஜி கணேசனையே அசிங்கப்படுத்திய பிரபல நடிகை! மன்னிப்பு கேட்க வற்புறுத்திய படக்குழுவினர்.. | Ennira Aadai Nirmala Interview Speaks About Sivaji

மன்னிப்பு கேட்கனும்

அதன்பின் காரிலும் பெட்ரோல் தீர்ந்து போக திருட்டு பெட்ரோல் போட்டுக்கொண்டு கோயம்பத்தூர் ரயில் நிலையத்தில் காரில் வந்தேன். அங்கும் ரயிலை பிடிக்காமல் போக லேட்டாகும் என்பதை படக்குழுவுக்கு லைட்னிங் கால் போட்டு காரில் வருகிறேன் என்று கூறி கிளம்பினேன். பின் ஸ்பாட்டிற்கு வந்து மேக்கப் போட்டுக்கொண்டிருந்த போது உதவியாளர் ஒருவர் என்னிடம் வந்து சிவாஜி சார் உங்களை கூப்பிடுகிறார் என்று கேட்டார்.

அதற்கு நான் ஏன் என்று கேட்டேன். நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டால் தான் அவரோடு நடிக்க முடியுமாம் என்று கூறினார். நான் என்ன தவறு செய்தேன். ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் லேட்டாக வருவதை அவரிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேனே என்று கூறினேன். அதை மீறியும் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதும் நான் தப்பு செய்யவில்லை சாரி சொல்லமுடியாது படத்தில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்தேன்.

சங்கடமான தருணம்

இப்படி நான் நடந்து கொண்டது அப்போது பெரிய பிரச்சனை ஆகியது. ஆனால் ஒரு விருது விழாவில் சிவாஜி சாரை பார்த்தேன். அப்போது என்னை பார்த்து அவரே கூப்பிட்டு பேசினார். அப்போது தான் எனக்கு புரிந்தது, அப்பவே சாரி கேட்டு இருக்கலாமே என்று தர்ம சங்கடத்திற்கு ஆளாகினேன் என்று தெரிவித்துள்ளார் வெண்ணிற ஆடை நிர்மலா.