41 வயதில் நடிகர் பஹத் பாசிலுக்கு வந்த நோய்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Fahadh Faasil
By Parthiban.A
வில்லன், குணச்சித்திர ரோல் என எது கொடுத்தாலும் தனது நடிப்பால் மிரட்டி வருபவர் பஹத் பாசில். அவருக்கு நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தற்போது 41 வயதாகும் பஹத் பாசில் தனக்கு ஒரு நோய் வந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
நோய்
ADHD என கூறப்படும் Attention-deficit/hyperactivity disorder என்ற நோய் அவருக்கு வந்திருக்கிறதாம். பொதுவாக குழந்தைகளுக்கு தான் இந்த நோய் வரும், ஆனால் பெரியவர்களுக்கு வந்தால் அதை சரிசெய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என கூறி இருக்கிறார்.
பஹத் பாசில் ADHT நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.