ஒருவாரம் கூட பிரிந்து வாழ முடியாது? கணவரை பார்க்க விமானத்தில் பறந்த நடிகை நயன்தாரா.

Nayanthara Vignesh Shivan Shah Rukh Khan Atlee Kumar
By Edward Jul 05, 2022 10:00 AM GMT
Report
140 Shares

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, கடந்த ஜூன் 9 ஆம் தேதிதான் ஆசை காதலன் விக்னேஷ் சிவனை 7 வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் எல்லாம் கிடையாது என்று பலர் கூறி வந்த நிலையில் அதை உடைக்கும் படியாக பேங்காக், தாய்லாந்து ஹனிமூன் சென்று புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்கள்.

இதனையடுத்து ஹனிமூன் முடிந்த கையோடு நயன் தாரா அட்லீ - ஷாருக்கான் படமான ஜவான் படப்பிற்கு கணவரை விட்டுவிட்டு மும்பை ஷூட்டுக்கு சென்றார். ஒருவார படப்பிடிப்பு முடித்து விட்டு நேற்று சென்னைக்கு திரும்ப மும்பை விமான நிலையம் சென்றிருக்கிறாராம் நயன் தாரா.

அதன் வீடியோக்கள் வெளியாகியதில், கல்யாணமாகி ஒரு வாரம் கூட கணவரை பிரியமுடியவில்லையா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.