இத்தனை கோடி இருந்தால் மட்டும் வாங்க? கதைக்கு தான் தாராளம் என கண்டிசன் போடும் நடிகை
சினிமாவில் அறிமுகமாகிய சில காலத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தற்போது முக்கிய படம் வெளியாகினால் தன் மார்க்கெட் எகிறிவிடும் என்ற ஆணவத்தில் இருந்து வருகிறாராம். படத்தில் முழு அர்ப்பணிப்போடு சிறந்த நடிப்பை கொடுத்துள்ள அம்மணி அப்படத்தின் இயக்குனருடன் நெருக்கமாக இருந்து வருகிறாராம்.
அவரும் தன் கடமைக்கு பொதுவெளியில் அம்மணியை ஒருமையில் பேசியும் வருகிறாராம். படத்தில் இதுவரையில்லாத அளவிற்கு தாராளம் காட்டி நடித்துள்ளாராம் நடிகை. இதனால் இப்படம் வெளியாகினால் தன் மார்க்கெட் உயர்ந்துவிடும் என்பதால் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார் அம்மணி.
இதனால் தனக்கு கதை கூறவரும் இயக்குனர்களிடம் கதை கேட்பதற்கு முன்பு சம்பள விசயத்தை பற்றி கூறிவிட்டுதான் மற்றதை ஆரம்பிக்கிறாராம். இதற்கு தயாரிப்பாளர்கள் இடம் கொடுக்கும் பட்சத்தில் அதிக கவர்ச்சிக்கும் தாராளம் காட்ட சம்மதிக்கிறாராம் அம்மணி.
இத்தனை கோடி சம்பளம் கேட்டதற்கு தயாரிப்பாளர்கள் சற்று தயக்கம் காட்டி வருகிறார்களாம். எப்படியும் இந்த படத்தில் முழு நம்பிக்கை இருப்பதால் தானாகவே வாய்ப்புகள் தேடி வரும் என்று ஆர்வத்துடன் காத்துக்கொண்டு வருகிறார் நடிகை.