சகோதரியின் கணவரை திருமணம் செய்த பிரபல நடிகை!! 98 வயதில் மரணம்...
காமினி கெளஷல்
நடிகை காமினி கெளஷல் இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றிகரமான நடிகையாக திகழ்ந்தவர். 90க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய காமினி கெளஷல், 98வது வயதில் வயது தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தவர் 2025 நவம்பர் 14 ஆம் தேதி காலமானார்.

1946ல் நீச்சா நகர் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிய காமினி, அசோக் குமார், ராஜ் கபூர், தேவ், ஆனந்த், திபீப் குமார், ராஜ்குமார், தர்மேந்திரா உள்ளிட்ட பல முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் நடித்த நீச்சா நகர் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்றது.
சகோதரியின் கணவருடன் திருமணம்
சினிமாவில் தன்னுடைய சிறப்பை காட்டி வந்த காமினி, தனிப்பட்ட வாழ்க்கையில் கவனிக்கப்பட்ட பிரபலமாக திகழ்ந்தார். 1948ல் அவரது சகோதரி, சாலை விபத்தில் உயிரிந்தப்பின், சகோதரியின் கணவரான பி எஸ் சூட் என்பவரை மணந்தார். மேலும் அவர் மற்றொரு புகபெற்ற நட்சத்திரமான திலீப் குமாருடனும் தொடர்பு கொண்டிருந்தார்.
அவர், அவரின் முதல் காதலி என்றும், இருவரும் ஷாஹீத் திரைப்படத்தில் ஒன்றாக நடித்ததாகவும் கூறப்படுகிறது. காமினி கெளஷல், கடைசியாக அமிர் கானின் லால் சிங் சத்தா, ஷாஹித் கபூரின் கபீர் சிங் படத்திலும் நடித்துள்ளார்.