இளையராஜா போல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு தலைக்கனம் வந்துவிட்டதா!! ரசிகர்களுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

A R Rahman Ilayaraaja
By Kathick Sep 11, 2023 03:03 AM GMT
Report

ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி நேற்று மாலை நடந்தது. இந்த கச்சேரிக்கு மொத்தமாகவே 35 ஆயிரம் டிக்கெட்ஸ் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், விற்கப்பட்டது கிட்டத்தட்ட 2 முதல் 3 லட்சம் டிக்கெட்ஸ். இதனால் நேற்று மாலை கச்சேரி நடந்து இடத்தில் பெரும் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

தரவரிசைப்படுத்தப்பட்டடு கோல்ட் டிக்கெட் ரூ. 2000, பிளாட்டினம் மற்றும் டைமண்டு போன்ற டிக்கெட்களின் விலை ரூ. 5000 அதற்கும் மேல் வைத்து விருப்பனை ஆகியுள்ளது. ஆனால், யார் யார் எந்தெந்த டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்று கவனிக்காமல் 35 ஆயிரம் பேர்களை உள்ளே அனுமதித்துள்ளனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ரூ. 2000 மற்றும் ரூ. 5000 கொடுத்த டிக்கெட் வாங்கிய அனைவரும் கடும் கோபமடைந்துள்ளனர்.

இதனால், அங்கு ஏற்பட்ட சில சலசலபில் ரசிகர்கள் சிலர் கதறி அழுது பயங்கியும் விழுந்துள்ளனர். இளையராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இசை கச்சேரி ஒன்றில் நடந்துகொண்ட விதம் மட்டும் ரசிகர்களுக்கு தவறாக தெரிகிறது. ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் செய்தால் மட்டும் ஏன் அது தவறாக தெரியவில்லை என்பது போல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.