கதறும் அஜித் ரசிகர்கள், கண்டுக்கொள்ளாத AK, என்ன தான் தீர்வு
Ajith Kumar
VidaaMuyarchi
By Tony
அஜித் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அஜித் படம் வாந்தால் போதும் ரசிகர்களுக்கு திருவிழா தான். ஆனால், அஜித் படங்களுக்கு அப்டேட் என்பது குதிரை கொம்பாக தான் சமீப காலமாக உள்ளது. வலிமை அப்டேட் கேட்டு உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர்.
ஆனால், விடா முயற்சி என்ன செய்தாலும் வேலைக்கு ஆகவில்லை. ஆம், படம் ரிலிஸாக இன்னும் 20 நாட்கள் கூட முழுதாக இல்லை, ஆனால் ஒரு சிங்கிள் கூட இன்னும் வரவில்லை.
இதனால் அஜித் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் இருக்க, அஜித்தோ ஷுட் முடித்து அடுத்து தன்னுடைய கார் ரேஸ் வேலைகளில் கவனம் செலுத்தவுள்ளார். அஜித் ரசிகர்களும் அப்டேட்ஸும் என்று ஒரு படமே எடுக்கலாம் போல.