திருமணமாகி பலமாதம் கழித்து நெற்றியில் குங்குமம்! சினேகன் மனைவியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

snehan kannika biggbossultimate
By Edward Mar 17, 2022 09:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பாண்டவர் பூமி, மெளனம் பேசியதே, பகவதி, சாமி உள்ளிட்ட வெற்றி படங்களில் பணியாற்றி நல்ல வரவேற்பை பெற்றவர் சினேகா. பாடலாசிரியர், நடிகர், புத்தக படைப்பாளி என்று பல திறமைகளை உள்ளடக்கியவர்.

2012க்கு பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சினேகன், 2017ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது கட்டிப்பிடி வைதியர் என்ற பெயரை பெற்று இறுதி சுற்று வரை சென்றார்.

கடந்த ஆண்டு பல வருடங்களாக காதலித்து வந்த சீரியல் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்தார். திருமணமாகி சில மாதங்களே ஆனநிலையில் சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றார்.

கணவர் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டின் உள்ளே இருக்கும் போது தனிமையை போக்க போட்டோஷூட், அவுட்டிங் என்று நாட்களை கழித்து வந்தார். தற்போது சினேகன் எலிமினேட்டாகி பிக்பாஸ் வீட்டினை விட்டு வெளியேறியதி வனிதா, தாடிபாலாஜி மற்று தனது மனைவியை சந்தித்தார்.

அதன்பின் மனைவி கன்னிகாவுடன் சேர்ந்து பிக்பாஸ் போட்டியாளரும் காமெடி நடிகையுமான ஆரத்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் சினேகன்.

அப்புகைப்படத்தினை வெளியிட்டு சினேகன் மனைவியை நெட்டிசன்கள் சிலர் கேலி செய்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் திருமணத்திற்கு பிறகு நெற்றியில் குங்குமத்தை தற்போது தான் பார்க்கிறோம் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 பிக்பாஸ் அல்டிமேட்டில் இருக்கும் போது சிம்பு சினேகனிடம், நன்றாக விளையாடுகிறீர்கள் ஆனால் ஒருசில சமயங்களில் சினேகனை காணோமே என்ற உணர்வு வருகிறது என்று கூறியிருந்தார். அப்போது சினேகன் என் மனைவி கன்னிகா நியாபம் வருவதால் கொஞ்சம் அழுகிறேன்.

ஏனென்றால் நான் அவளிடம் காதலை வெளிப்படுத்த கையில் தாலியுடன் சென்றுதான் பிரப்போஸ் செய்தேன். அந்த தாலி ஒரு நாளில் திருடு போய்விட்டது என்று உருகி பேசியுள்ளார். இதன் காரணமாக கன்னிகா பொட்டு வைக்காமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Gallery