நான் மோசமானவனா...சிவகுமாரை விட்டுட்டீங்க!! கொந்தளித்து பேசிய கங்கை அமரன்..
கங்கை அமரன்
இளையராஜாவின் சகோதரரும், இயக்குநர், நடிகர், இசையமைப்பாலர், பாடலாசிரியர் என பன்முக திறமையை கொண்டு தனக்கான ஒரு இடத்தினை பிடித்தவர் தான் கங்கை அமரன். தற்போது ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் கங்கை அமரன், சில செயல்களால் விமர்சிக்கப்பட்டும் வருகிறார். சமீபத்தில் நடந்த மறைந்த பாடலாசிரியர் கவிஞர் வாலியின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.

அதில் கலந்து கொண்டப்பின் செய்தியாளர்களிடம் பேச ஆரம்பித்தார். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அதனை கவனித்த கங்கை அமரன், நீங்கள் பேசுங்கள் என்று சொல்ல, அந்த நபரும் உண்மை என்று கருதி மைக் முன் நின்று பேச ஆரம்பித்தார்.
சர்ச்சை விஷயம்
உடனே கங்கை அமரன், பாதியிலேயே அங்கிருந்து புறப்பட முற்பட்டார். அங்கிருந்தவர்கள் மீண்டும் அவரை பேச அழைக்க, கோபத்தில் அந்த நபரை திட்டியிருக்கிறார். அவரும் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்.

இதுகுறித்து சமீபத்தில் கங்கை அமரன் அளித்த பிரஸ் மீட்டில், கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்கை அமரன், எனக்கு கோபம் வராது, நான் ஒருத்தர் ஒருத்தர்களுக்கும் போட்டோ கொடுத்து வந்தேன்.
அப்போது என் பக்கத்தில் இருந்தவர், நடந்துக்கொண்ட விதம் எரிச்சலடைய வைத்தது. இதனால் கொஞ்சம் கோபம் வந்து, நீ பேசு என்று கூறினேன். கேமரா முன் ஒருவர் நின்று பேசும் போது எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள் என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
சிவகுமாரை விட்டுட்டீங்க
மேலும், ஒரு ஆள் வளர்ந்தப்பின் அவரிடம் என்ன தவறு இருக்கிறது என்று நோட் செய்வதற்கு பலர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர் பின்னால் நின்று கொண்டு கேமராவை பார்த்து என்னென்னமோ செய்தார். உடனே அதை போட்டு என்னை மோசமான ஆளாக்கிவிட்டார்கள். சிவகுமாரும்தான் ஃபோனை தட்டிவிட்டார், யாராவது எதாவது செய்தீர்களா என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார் கங்கை அமரன்.