வாயை பொத்திட்டு இரு வைரமுத்து!! இளையராஜாவை விமர்சித்தவரை அசிங்கமாக பேசிய கங்கை அமரன்..
இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்கள் தனக்கு சொந்தம் என்றும் பாடல் வரிகள் எல்லாம் பெரிய விசயமே இல்லை என்று கோப்புரிமை கோரி வழக்குகளை கொடுத்து வருகிறார். இதுகுறித்து, விசாரித்த நீதிபதி, பாடலாசிரியரும் பாடல்களுக்கு சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்று கேள்வியை கேட்டிருந்தார்.
சமீபத்தில் கூட பாடலாசிரியர் வைரமுத்து, இசை எவ்வளவு பெரிதோ, அந்தளவிற்கு மொழி பெரிது, சில நேரங்களில் இசையைவிட மொழி சிறந்ததாகவும் திகழும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். இதை புரிந்து கொண்டவன் ஞானி புரிந்து கொள்ளாதவல் அஞ்ஞானி என்று சில கருத்தினை கூறியிருந்தார்.
வைரமுத்து பேசியதை அறிந்த இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், பேட்டியொன்றில் அவரை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். வைரமுத்து இந்தளவிற்கு உயர காரணமே நாங்கள் போட்ட பிச்சை தான் என்றும் இல்லையென்றால் அவர் ஒரு ஆளாகவே ஆகியிருக்க முடியாது என கூறியிருக்கிறார்.
மேலும் நல்ல பாடலாசிரியர் தான் வைரமுத்து. ஆனால் நல்ல மனிதர் கிடையாது, கொஞ்சமும் நன்றி உணர்வு இருந்திருந்தால் இப்படி இளையராஜாவை பற்றி தப்பாக பேசியிருக்க மாட்டார். இப்படி கொச்சைப்படுத்துவார்ன்னு தெரியல, இளையராஜவை பற்றி பேசாம வாயை பொத்திட்டு இரு, உன் வேலை என்னவோ அதை பாரு என்று கடுமையாக திட்டி பேசியிருக்கிறார்.
Oh ? pic.twitter.com/U3Uj4R3XAa
— macchu (@macchu_offcl) April 30, 2024