இளைஞர்களை கெடுத்து காசு சம்பாதிக்கனுமா? புஷ்பா பட நடிகைகளை கடுமையாக திட்டிய பிரபலம்..

samantha pushpa alluarjun rashmikamandanna oosolriyamama GarikapatiNarasimharao
By Edward Feb 15, 2022 09:20 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம்தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிய படம் புஷ்பா. அல்லுஅர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி சாதனை படைத்துள்ளது.

இப்படத்தில் நடிகை சமந்தா ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டது படத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தியது. இன்று வரை படத்தின் வசூல் 350 கோடிக்கும் மேலாக வசூலை அளிக்குவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பற்றி தெலுங்கு பிரபல சொற்பொழிவாளரும் இலக்கியவாதியுமான கரிகா பதி நரசிம்ம ராவ் குற்றம் சாட்டி புஷ்பா படத்தில் நடித்தை அனைவரையும் கண்டபடி திட்டியுள்ளார்.

குற்றம் செய்யும் ரவுடியை நல்லவனாக சித்தரித்து நடித்திருப்பது இளைஞர்கள் சமுதாயத்தை கெடுக்கும் விதாமான அமைந்துள்ளது. மேலும் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, சமந்தா எல்லைமீறிய ஆடைகளை அணிந்து ஆபாசமாக ஆடியது கொஞ்சம் கூட நன்றாகயில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.

இப்படி காட்டித்தான் சம்பாதிக்க வேண்டுமா என்றும் கேள்வி கேட்டுள்ளார். படம் வெளியாகி 50 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில் இப்போது கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.