13 வருட ரிலேஷன்ஷிப்.. கமலை பிரிய நடிகை கெளதமி சொன்ன 3 முக்கிய காரணங்கள்..
தமிழ் சினிமாவின் உலகநாயகனாக திகழ்ந்து உச்ச நடிகராகவும் கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன். எவ்வளவோ புகழ் வாங்கினாலும் கமல் ஹாசன் பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்களிலும் சிக்கி வந்தார்.
இதனை மேடைகளில் பல முறை வெளிப்படையாகவே கூறியிருந்தார். வாணி மற்றும் சரிகா உள்ளிட்ட நடிகைகளை பிரிந்தப்பின் ஒருசில நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கி வந்தார் கமல்.
அதில் 13 ஆண்டுகள் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை நடிகை கெளதமியுடன் வாழ்ந்துள்ளார் கமல். நம்மவர் மற்றும் தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தப்பின் இருவரும் திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
அப்போது விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களில் பிஸியாக நடித்த போது கமல் ஹாசனை பிரிவதாக கெளதமி பேட்டிக்கொடுத்து அறிவித்தார். தன் மகளின் எதிர்காலத்தின் நன்மைக்காத் தான் பிரிகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான முக்கிய 3 காரணங்கள் வெளியாகியுள்ளது.
கமலை பிரிவதற்கு முன் கெளதமிக்கு சுயமரியாதை கிடைக்காமல் அதை இழந்ததால் மனம் நொந்து இருக்கிறார். மேலும் கமல் ஹாசனுக்கு ஆடைவடிவமைப்பாளராக பல படங்களில் வேலை செய்திருந்தார் கெளதமி.
அப்படி தசவதாரம் மற்றும் விஸ்வரூபம் படத்தில் வேலை செய்ததற்கான சம்பளத்தை கெளதமிக்கு கொடுக்கவில்லையாம். அதைவிட பிரிவதற்கு முன் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் மனம் ஒத்து வாழமுடியாமல் தான் பிரிந்திருக்கிறார் கமல் ஹாசன்.