வளர்த்த கிடா மார்பில் பாயுதா.. விஜய்க்கு எதிராக லியோ தயாரிப்பாளர் செய்யும் செயல்
தமிழ் சினிமாவின் கிங் என்றால் தற்போது விஜய் தான். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதோடு வசூலில் இவர் படங்களுக்கு ரஜினி படங்கள் மட்டுமே தற்போது போட்டி.
இந்நிலையில் விஜய்யின் லியோ படம் உலகம் முழுவதும் ரூ 590 கோடி வசூல் செய்துள்ளது, அப்படியிருக்க அப்படத்தின் தயாரிப்பாளர் லலீத் விஜய்யின் கோட் படத்திற்கு எதிராக ஒரு செயலை செய்யவுள்ளாராம்.
ஆமாங்க, விஜய்யின் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரவுள்ளது, இதை ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
ஆனால், அதே நாளில் தான் லலீத் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் எல் ஐ சி படத்தின் டீசரும் வரவுள்ளதாம், இதனால் கோட் சிங்கிளுக்கு எந்த பாதிப்பு இல்லை.
இருந்தாலும், டாக் ஆப் தி டவுன் ஆக இருக்க வேண்டிய கோட், விக்னேஷ் சிவன் டீசர் க்ளிக் ஆனால், பேச்சு அது பற்றி மாறிவிடும் அல்லவா, இதை லலீத் யோசிக்கவில்லை என தெரிகின்றது.