தளபதிய என்னடா பண்ணி வெச்சு இருக்கீங்க!! கோட் விஜய்யால் கடுப்பாகிய சீரியல் நடிகை நிமிஷிகா..
நடிகை நிமிஷிகா
ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கண்ணான கண்ணே சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நிமிஷிகா. தற்போது புனிதா என்ற சன் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார்.
விரைவில் புனிதா சீரியல் ஒளிப்பரப்பாகவுள்ள நிலையில் பேட்டியொன்றில் கலந்து கொண்டு கோட் படத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
தியேட்டரில் ஒரு படத்தை பார்த்துவிட்டு ஏன் தான் இந்த படத்துக்கு வந்தோம் என நினைச்சிருக்கீங்களா என்றும் கடைசியாக பார்த்த படம் என்ன என்ற கேள்வியை தொகுப்பாளர் கேட்டுள்ளார்.
அதற்கு நிமிஷா, அப்படி நிறைய படங்கள் இருக்கு, சமீபத்தில் தமிழில் வெளியான பல படங்கள் அப்படித்தான் இருக்கு. நிறைய படங்களில் பாதியிலேயே எந்திருச்சு ஓடி வந்துவிட்டேன் என்று நிமிஷிகா கூறியுள்ளார்.
கோட் விஜய்
கடைசியாக நான் தளபதியோட கோட் படம் தான் பார்த்தேன். இளம் வயது விஜய்யை காட்டுறேன்னு, ஸ்பைக் எல்லாம் வைத்து தளபதியை ரொம்பவே மோசமாக காட்டிவிட்டனர்.
கோட் படத்தில் தளபதியை என்னடா பண்ணி வெச்சிருக்கீங்கன்னு நினைச்சேன். நான் தல ரசிகைதான், விஜய் பிடிக்கும். அவரது படங்களைத்தான் பொதுவாக அதிகம் தியேட்டரில் பார்ப்பேன். படத்தில் இருந்து பாதியிலேயே வெளியே வந்துவிட்டேன் என்று நிமிஷிகா தெரிவித்துள்ளார்.