Godzilla x Kong: The New Empire பெரிய ஸ்கிரீனில் ஒரு WWF- விமர்சனம்
தமிழ் சினிமா பல மாதங்களாக பாக்ஸ் ஆபிஸில் தவழ்ந்துகொண்டு இருக்க, மஞ்சும்மல் பாய்ஸ், ப்ரேமலு இப்போ ஆடு ஜீவிதம் என சேட்டன்களே தமிழ் நாட்டு பாக்ஸ் ஆபிஸ் காப்பாற்ற, கண்ணா இதெல்லாம் டீசர்மா மெயின் பிக்சர் நான் தான் என்று இரண்டு அரக்கர்கள் அதகளத்தில் இன்று ரிலிஸாகியுள்ள அடம் தான் Godzilla x Kong: The New Empire.
படத்தின் ஆரம்பத்திலேயே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என ஜாலியாக மக்கள் வாழ்ந்து வர, அட இது ஹாலிவுட் படம்ப்பா உலகத்தை யாராது அழிச்சே ஆகனும், அதை யாராது காப்பாற்றியே ஆகனும்னு ஒரு சவுண்ட் வர, நாப்பாது வருஷமா தூங்கிட்டு இருந்த காட்சில்லா முழித்துகொண்டு குதிச்சிற கைப்புள்ளனு ஒரு குளத்தில் குதிக்கிறது.
காங் பல் டாக்டர் தேடி அலைஞ்சு பல் சொத்தை ஆகி வலி தாங்க முடியாமல் ஒரு இடத்தில் வந்து படுக்கிறது. என்னடா இதெல்லாம் பித்தலாட்டம் அவ்ளோ பெரிய காங்-கு பல் சொத்தை அது ட்ரீட்மெண்ட் வருதானு நீங்க கேட்கறது புரியுது, ஆனா உண்மையாவே சொத்தை பல் புடிங்கிட்டு, இரும்பு பல் பிக்ஸ் பண்றாரு டெண்ட்டிஸ்ட்.
அப்றம் காங் ஆட்டோகிராப் சேரன் போல் நியாபகம் வருதே நியாபகம் வருதேனு ஒரு குளிக்குள்ள குதிச்சு அதோட உலகிற்கு வர, அங்க நம்பியார் ஸ்கார்கிங் குட்டி காங் மற்றும் பயந்த சுபாவம் உள்ள காங்-யை எல்லாம் மிரட்டி வேலை வாங்குது.
அட வேலைன ஒன்னுமில்லங்க, இங்கிருந்து ஒரு கல் எடுத்துட்டு போய் அங்குட்டு வைக்கனும், அங்கருந்து ஒரு கல் எடுத்து இங்க வைக்கனும்ன்ற மாதிரி எல்லா காங் கல் தூக்கிட்டே சுத்த, இதை பார்த்த நம்ம ஹீரோ காங் சும்மா இருக்குமா...ஆ என் மக்கள் கஷ்டப்படுவதா என நான் நானையிட்டால் என்று சாட்டை விளாச, சின்ன டெக்னிக்கல் மிஸ்டேக்.
இந்த சாட்டைய விட்றது வில்லன் ஸ்கார்கிங் தாங்க, அப்படியே முதுகு எழும்பே உரிஞ்சு பிற மாதிரி அடிக்க, ஆள விடற சாமினு காங் எகிறி குதித்து கையை உடைத்துக்கொண்டு ஈவி மக்கள்கிட்ட உதவி கேட்டு வருது.
இதுக்கு இதுதான் வேலை எதையாது டேமேஜ் பண்ணி நம்ம கிட்ட வந்து ஹெல்ப் கேட்டு இருக்கு, இதையே நாம தான் காப்பாத்தனும், இது உலகத்த காப்பாத்துதா என்று மைண்டில் வருவதை தடுக்க முடியலங்க.
அட கை உடைஞ்சுருச்சுனு அதுக்கு சரி பண்ண டாக்டர் வறாருங்க..இரும்பு கை மாயவி மாதிரி ஒரு ஐயன் கௌளவுஸ் மாத்தி விட, இப்ப பாருங்கடா என ஆட்டத்த என தன் நண்பன் காட்சில்லாவா கூப்பிட நம் வாழும் உலகிற்கு காங் வருகுறது.
ஹெல்ப் கேட்க போன இடத்துல காட்சில்லா டேய் நீ இங்க தான் இருக்கியானு பொரட்டி எடுக்க, காங்-கிற்கு கன நேரத்தில் அட நம்மகிட்ட தான் இரும்பு கை இருக்கேனு எடுத்து அடிக்க, அங்க வர ஒரு 70MM மெகா சைஸ் வண்டு, அட முட்டாள் ஜந்துகளே, நாம அடிக்க வேண்டியது அவனடா என ஸ்கார்கிங் காட்ட அப்றம் என்ன கேங் வார் தான், அதுல யார் ஜெயிச்சான்றது கிளைமேக்ஸ்.
படத்துல மிகப்பெரிய குறியீரு ஒன்ன இயக்குனர் வச்சுருகாருங்க, ஹாலிவுட் பா.ரஞ்சித் இவர் தாண்டா என கம்பு சுத்துற அளவுக்கு ஆரஞ்சு காங்-யை வில்லனாகவும், கருப்பு காங்-யை ஹீரோவாகும் காட்டிருக்காங்க, எதாச்சு சம்மந்தம் இருக்கானு கேட்டால், எதையாச்சு சம்மந்தப்படுத்தி கட்டுரை எழுதுற பாய்ஸ் இதை யூஸ் பண்ணிகோங்க.
சரி படத்துல கதை இருக்கா, திரைக்கதை நல்லாருக்கானு நோலன் ரசிகர்கள் வெறிக்கொண்டு கேட்டால் இது உங்களுக்கான படம் இல்லங்க, அதெல்லாம் இருக்கட்டம், படத்துல சண்டை இருக்கானு கேட்டா.., நீ தான்யா என் இனம், நீங்க பார்த்து விசில் அடிக்கிற படம் தான் இது.