என்னது நடிகை குட்டி திரிஷாவுக்கு அவருடன் திருமணம் முடிஞ்சிடுச்சா!! வைரலாகும் புகைப்படம்..
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடித்திருந்த ஜானு என்ற கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது.
இதனை அடுத்து மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் கொண்ட கௌரி கிஷன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.
சமீபத்தில் ஹாட் ஸ்பாட் என்ற படத்தில் நடித்துள்ள கெளரி, 96 படத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் பெண் ஆணுக்கு தாலிக்கட்டுவது போல் இருக்கும் காட்சி பலரின் எதிர்ப்புக்குள்ளானது.
இந்நிலையில் ராம் அண்ட் ஜானுவின் இணையான பிரபஞ்சம் என்று கூறி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கெளரி கிஷான். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் தலையே சுத்திவிட்டது என்று கருத்துக்களை தெரிவித்து விமர்சித்து வருகிறார்கள்.