ஸ்கூல்ல ரெண்டு பேர் காதலிச்சாங்க..நான் வேறொருத்தன காதலிச்சேன்!! நடிகை கெளரி கிஷன்..
கெளரி கிஷன்
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நடித்திருந்த ஜானு என்ற காதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது. இதனை அடுத்து மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த அடியே, ஹாட் ஸ்பாட், போட் போன்ற படங்களில் நடித்திருந்த கெளரி, தற்போது அதர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியில், தன்னுடைய காதல் பற்றிய ரகசியத்தை கூறியிருக்கிறார்.

ரெண்டு பேர் காதலிச்சாங்க
அதில், ஒரு படத்தில் ஏன் நடித்தேன் என்று யோசித்து இருக்கிறேன். எனக்கு ஸ்கூல் படிக்கும் போது 2 பேர் என்னை காதலித்து பிரபோஸ் செய்தார்கள், நிராகரித்துவிட்டேன்.
ஆனால் நான் வேறொரு பையனை பிரபோஸ் செய்தேன். என் முதல் காதல் பிரேக்கப் ரொம்பவே கஷ்டமாக இருந்தது, அதை மறக்க ஒரு வருஷம் ஆகிடுச்சு என்று கெளரி கிஷன் தெரிவித்துள்ளார்.