பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஜிபி முத்து.. உண்மையான காரணம் இந்த நடிகை தான்..
யூடியூப் சேனலில் படுபயங்கரமான பேச்சால் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஜிபி முத்து. டிக்டாக் மூலம் அறிமுகமாகி பல லட்சம் பார்வையாளர்களை கவனம் ஈர்த்து வந்த ஜிபி முத்து, பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களை ஈர்த்து வந்த அவர் 12 நாட்களுக்கு மன உளைச்சல் காரணமாகவும் தன் மகனை பார்க்க வேண்டும் என்ற காரணத்தினாலும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இதனை அடுத்து மகனுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய வீடியோவையும் வெளியிட்டார். இந்நிலையில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனி நடித்த ஓமை காட் ஜோஸ்ட் என்ற படத்தில் நடித்தும் இருக்கிரார் ஜிபி முத்து. படத்தின் டிரைலர் லான்சில் கலந்து கொண்ட ஜிபி முத்து சன்னி லியோனிற்கு பால்கோவாவையும் ஊட்டி சந்தோஷப்பட்டுள்ளார்.
மேலும், மேடையில் ஏறிய காமெடி நடிகர் சதீஷ், சன்னி லியோன் படத்தின் டிரைலர் லான்ச்சில் கலந்து கொள்ளவிருப்பதால் தான் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணம் என்று கூறியுள்ளார்.
இதற்கு ஜிபி முத்து வேண்டாம் சதீஷ் பெரிய பிரச்சனையாகிடும் அண்ணே எனக்கு வசமா மாட்டீட்டேன்ல என்று ஜிபி முத்துவை மாட்டிவிட்டுள்ளார் சதீஷ. இதற்கு சன்னி லியோன், நானும் பிக்பாஸில் இருந்தேன், இவரும் பிக்பாஸில் இருந்தார் என்று கூறியிருக்கிறார்.
