நான் செஞ்சதை திருப்பி செஞ்சிட்டாங்க!! ரோஹித்தை மறைமுகமாக தாக்கிய MI கேப்டன்..
ஹர்திக் பாண்டியா
ஐபில் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஆடிய இரு போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. ஹார்திக் பாண்டியா கேப்டனாக இரண்டாவது போட்டியில் ஆடியும் மும்பை இந்தியன்ஸ் அணியினர் தோல்வியை தழுவினர். தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா சொன்ன கருத்து தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
அதில், நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை பட்டியலிடுவது மிகவும் கடினம். ஏனென்றால் நாங்கள் பல தவறுகளை செய்தோம். ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை, ஃபீங்கில் நாங்கள் சொதப்பியதால் 20, 25 ரன்கள் கூடுதலாக குஜராத் அணியை அடிக்கவிட்டு இருந்தோம்.
நான் நிறைய பந்துகள் வீசினேன். அப்போது பந்து ஆடுகளத்தில் நின்று வருகிறதை குஜராத் வீரர்கள் அறிந்திருப்பார்கள். அந்தவகை பந்துகளை அடிப்பது கடினம். ஆடுகளத்தில் நிலையான் பவுன்ஸ் இல்லை, இதனால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
ரோஹித்
நான் அவர்களுக்கு செய்ததை எனக்கு அவர்கள் மீண்டும் செய்துவிட்டார்கள் என்று ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். சொர்ப்ப ரன்களில் அவுட்டாகிய ரோஹித் சர்மாவைத்தான் அவர் இப்படி மறைமுகமாக தாக்கி பேசினாரா என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.