ஹெச் வினோத் பெரிய ஆளுதான்.. வலிமை ட்ரெய்லரில் இதை கவனித்தீர்களா?
வலிமை ட்ரெய்லர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. படத்தில் அஜித் போலீசாக இருந்து பைக் ஸ்டண்ட்டில் கைதேர்ந்த வில்லனை எப்படி பிடிக்கிறார் என்பது தான் கதை எனட்ரைலரில் காட்டப்பட்டு இருந்தது.
ட்ரெய்லரில் இருக்கும் காட்சிகளில் வினோத் பல்வேறு குறியீடுகளை வைத்திருக்கிறார் என கூறி அது பற்றி தான் இணையவாசிகள் தற்போது விவாதித்து வருகின்றனர். ஒரு காட்சியில் பணம் கொண்டு செல்லும் ஜீப் போன்ற வண்டியின் பின்புறம் பைக்கில் சென்று பாம் வைத்து அதை வெடிக்கச்செய்வது போன்று காட்டப்பட்டு இருக்கும். பின்னால் பைக் வருவதை சைடு மிரரில் டிரைவர் பார்க்கவில்லையா என யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த வண்டியில் மிரர் இல்லாமல் தான் ஷூட் செய்திருக்கிறார் வினோத். இப்படி அந்த ட்ரெய்லர் முழுவதும் பல விஷயங்கள் இருக்கிறது.

மேலும் மொத்த கதையையும் ட்ரெய்லரில் சொல்லிவிட்டு ரசிகர்களை படம் பார்க்க வைக்க முடியுமா? முடியும் என்கிற நம்பிக்கையில் தான் வினோத் இப்படி செய்திருக்கிறார். பெரிய ஆளுதான்.. என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
The Name Is #Hvinoth ?#ValimaiTrailer #Valimai pic.twitter.com/nsnnHm5hgv
— Kokki Kumaru 2.0 :-D (@2_kokki) December 31, 2021