திருமணமாகிய சில மாதத்தில் அந்த விசயத்தில் நயனை முந்திய ஹன்சிகா!! எல்லாமே காசுதான்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.
அதன்பின் நடிகர் சிம்புவிடன் காதலில் இருந்து சில ஆண்டுகள் கழித்து பிரிந்தார். உடல் எடையை ஏற்றியதால் வாய்ப்பில்லாமல் இருந்த ஹன்சிகா கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு படுஒல்லியாக மாறினார்.

கடந்த ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்ற அந்த திருமணத்தில் பல கோடி செலவில் நடைபெற்றது.
இந்நிலையில் எப்படி நடிகை நயன் தாரா விக்னேஷ் சிவன் திருமணம் 25 கோடிக்கும் ஆசைப்பட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் திருமண வீடியோவை விற்றோர்களோ அதேபோல் நடிகை ஹன்சிகாவும் செய்துள்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் ஹன்சிகா - சோஹைலின் திருமண வைபோக நிகழ்வுகள் லவ் ஹாடி டிராமா என்ற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளது.
இதில் நயன் தாராவின் திருமண வீடியோ இன்னும் வெளியாகாத நிலையில் இந்த விசயத்தில் ஹன்சிகா நயனையே முந்திவிட்டாரே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சமீபகாலமாக நடிகைகள் திருமணத்தில் செலவு செய்ததை, காசாக்கி சம்பாதித்தும் வருகிறார்கள்.