விவாகரத்து பெற்ற ஹன்சிகா!! ரூ. 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நாத்தனார் மீது வழக்கு..

Hansika Motwani Gossip Today Bollywood Indian Actress Actress
By Edward Apr 10, 2026 11:00 AM GMT
Report

ஹன்சிகா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா. அதன்பின் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் நடித்து வந்த ஹன்சிகா, கடந்த 2022ல் சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்து பெற்ற ஹன்சிகா!! ரூ. 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நாத்தனார் மீது வழக்கு.. | Hansika Motwani Case File Against Sister In Low

ஹன்சிகா திருமணம் செய்து கொண்டது தனது தோழியின் முன்னாள் கணவர் என்பதால் பலர் விமர்சித்து வந்தனர். இதையடுத்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், 2024க்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் சட்டபூர்வமான விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

2 கோடி நஷ்ட ஈடு

இந்நிலையில், ஹன்சிகாவின் முன்னாள் கணவரின் சகோதரியும் சின்னத்திரை நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் மீது மும்பை திண்டோசி அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஹன்சிகாவின் மனுவில், தனது நாத்தனார் சமூக ஊடகங்களிலும் மற்ற இடங்களிலும் என் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றுள்ளார்.

விவாகரத்து பெற்ற ஹன்சிகா!! ரூ. 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நாத்தனார் மீது வழக்கு.. | Hansika Motwani Case File Against Sister In Low

அதனால் ஏற்பட்ட மன வேதனைக்கு அவர் எனக்கு ரூ. 2 கோடி இழப்பீடும் பகிரங்கமான மன்னிப்பும் தெரிவிக்க வேண்டும். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிக்கும் ஒரு மூன்றாம் தர நடிகையான அவர் அடிக்கடி விலையுயர்ந்த பைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்கிறார்.

அதேசமயம், எனக்கு தரவேண்டிய ரூ.27 லட்சம் கடனை மட்டும் தராமல் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். கடனை திருப்பி செலுத்துவதை தவிர்ப்பதற்காக எனக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் சமூக வலைத்தளங்களில் அவதூறான விஷயங்களை பேசத் தொடங்கியுள்ளார் என்று கூறியிருக்கிறார்.

விவாகரத்து பெற்ற ஹன்சிகா!! ரூ. 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நாத்தனார் மீது வழக்கு.. | Hansika Motwani Case File Against Sister In Low

இது ஒரு பக்கம் இருக்க, முஸ்கான் நான்சி ஜேம்ஸ் தன்னுடைய கணவர்(ஹன்சிகாவின் சகோதரர்) மற்றும் ஹன்சிகா மீது கொடுமை, துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த ஹன்சிகா என் மீது துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதது, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.