மகள் ஹன்சிகாவுக்காக கணவரிடம் நிமிடத்திற்கு ரேட் பேசிய அம்மா!! இதுக்குமா டீல் பேசுவாங்க

Hansika Motwani
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் வட இந்திய பெண்ணாக இருந்து தமிழில் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை ஹன்சிகா மோத்வானி. பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாகினார்.

மகள் ஹன்சிகாவுக்காக கணவரிடம் நிமிடத்திற்கு ரேட் பேசிய அம்மா!! இதுக்குமா டீல் பேசுவாங்க | Hansika S Mother Demanded Rs 5 Lakh Per Minute

இதற்கிடையில் உடல் பருமன் அதிகரித்து காணப்பட்டதாலும் சிம்புவுடன் காதலில் இருந்து பின் பிரிந்ததாலும் தன் மார்க்கெட்டை இழந்து வந்தார். அதன்பின் தன்னுடைய 50வது படமான மஹா படத்தில் சிம்புவை ஜோடியாக நடிக்க வைத்தும் ஓரளவிற்கு வெற்றியை கண்டார் ஹன்சிகா மோத்வானி.

கடந்த ஆண்டு 4 ஆம் தேதி தோழியின் முன்னாள் கணவரான சோஹேல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றதை வீடியோவாக எடுத்து டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட்டார் ஹன்சிகா.

மகள் ஹன்சிகாவுக்காக கணவரிடம் நிமிடத்திற்கு ரேட் பேசிய அம்மா!! இதுக்குமா டீல் பேசுவாங்க | Hansika S Mother Demanded Rs 5 Lakh Per Minute

இந்நிலையில் லவ் ஷாதி டிராமாவில் பல விசயங்களை பதிவு செய்திருந்த ஹன்சிகா, தன் தாய் மோனா மோத்வானி மருமகனின் குடும்பத்தினரிடம் ஒரு நிமிடத்திற்கு லட்சத்தில் ரேட் பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, சோஹேல் விழாக்களுக்கு தாமதமாக வருவதை நிறுத்த புகார் செய்தேன். திருமணத்திற்கு தாமதமாக வந்தால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.