தோனியுடன் பேசி 10 வருஷம் ஆச்சு..என் லிமிட் இதான்!! காரணத்தை உடைத்த ஹர்பஜன் சிங்..
ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சீஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் 2021ல் அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதன்பின் 2018 முதல் 2020 வரை சென்னை அணிக்காக விளையாடி இருந்தார். தற்போது எம் எஸ் தோனி குறித்து ஒரு தகவலை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அதில், நானும் தோனியும் பேசி 10 ஆண்டுகளாகிறது. சென்னை அணிக்காக இருவரும் விளையாடி இருந்தாலும் இருவரும் களத்தில் போட்டி சம்பந்தமான உரையாடல்களை மட்டுமே பேசியிருந்தோம்.
காரணம்
ஒருவேளை தோனி தன்னிடம் பேசாமல் இருப்பதற்கு காரணம் இருக்கலாம், என்னை பொறுத்தவரை அவர் என்னிடம் பேசாமல் இருக்க காரணம் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.
இரண்டு முறை தோனியிடம் பேச முயற்சித்தேன், ஆனால் எந்த பதிலும் வரவில்லை, எனவே தான் மீண்டும் அவ்வாறு செய்வதை தவிர்க்க முடிவு செய்ததாக ஹர்பஜன் கூறியிருக்கிறார்.