ரெட்டை குழந்தை பெற்றப்பின் கோடியில் புறளும் நயன்தாரா!! மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா..
நடிகை நயன்தாரா அறிமுகமாகி 20 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆரம்பத்தில் காட்டிய கவர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக குறைத்து அடக்கவுடக்கமாக நடித்து வந்தார். கடைசியாக வில்லு, பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார். தற்போது திருமணமாகி இரட்டை குழந்தை பெற்றப்பின் அந்த கவர்ச்சியை மீண்டும் இறக்கி இருக்கிறார்.
ஜவான் படத்தில் கூட கவர்ச்சியை காட்டாத நயன் தாராதான் ஆரம்பித்த 9 ஸ்கின் பிராடெக்ட்டின் பிரமோஷனுக்கான விளம்பரத்திற்கு படுகவர்ச்சியாக நடித்து வீடியோவை பகிர்ந்தார். இதுவரை இல்லாத அளவிற்கு விளம்பரத்திற்காக கவர்ச்சியை காட்டி வருகிறார். தினமும் தன்னுடைய பிராடெக் வசூலாக வேண்டும் என்பதற்காக விளம்பர வீடியோவில் படுகவர்ச்சியை காட்டி மிரட்டி வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா திருமணமாகி ரெட்டை குழந்தை பெற்றப்பின் அவரது சொத்து மதிப்பு கூடியிருக்கிறது. தென்னிந்திய நடிகைகளில் ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே நடிகை நயன் தாரா தான்.
லிப்பாம், தயாரிப்பு நிறுவனம், சமீபத்தில் ஆரம்பித்த 9Skin Care தொழில், தனியார் நிறுவனத்துடன் ஏற்படுத்திய இன்வெஸ்ட்மெண்ட் தொழில் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார். நயன் தாரா.
இதன்மூலம் பல கோடியில் சம்பாதித்தும் ஒரு படத்திற்காக 5 முதல் 10 கோடி சம்பளமும் வாங்குகிறாராம். மேலும் 50 நொடி விளம்பர வீடியோவுக்கு 5 கோடியும் நேரத்திற்கு ஏற்ப சம்பளத்தை ஏற்றுவாராம்.
விலையுயர்ந்த கார், ஹைதராபாத், கேரளா, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் பங்களாவும் இருக்கிறது. ஆக அவரது சொத்து மதிப்பு சுமார் 1000 கோடி அளவிற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.