பாண்டிபஜாரில் புத்தகம் விற்ற நடிகை!! முரளி, அஜித்துக்கு ஜோடியான ஹீராவின் பேக்ரவுண்ட்

Heera Rajgopal Indian Actress Tamil Actress Actress
By Jai Nov 25, 2026 09:48 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்த நடிகை ஹீரா ராஜகோபால் பற்றிய தகவல் இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஹீரா ராஜகோபால்

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் வெளியான இதயம் படத்தின் மூலம் அறிமுகமாகி நீ பாதி நான் பாதி என்ற படத்தில் கவிதாலயா தயாரிப்பிலும் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஹீரா ராஜகோபால். இப்படத்தினை தொடர்ந்து திருடா திருடா அமானத் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பாண்டிபஜாரில் புத்தகம் விற்ற நடிகை!! முரளி, அஜித்துக்கு ஜோடியான ஹீராவின் பேக்ரவுண்ட் | Heera Rajagopal Indian Former Actress Bio Details

சினிமாத்துறையில் பல ஹீரோக்கள் ஹீராவை காதலித்தும் வந்தனர். ஆனால் ஹீரா எந்த காதலையும் ஏற்கவில்லை, இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய துணை கதாபாத்திரங்களில் நடித்தார். பின் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி திருமணமாகி செட்டிலாகினார். சமீபத்திய பேட்டியில் தவிர்க்க முடியாத அழுத்தங்களுக்கு அடிபணிய விரும்பாததால் தான் நான் சினிமாவில் இருந்து விலக காரணம் என்று கூறினார்.

ஹீரோவின் தந்தை ராணுவ டாக்டராகவும், அம்மா ராணுவ நர்ஸாகவும் பணியாற்றியவர்கள். இந்தியா முழுக்க தந்தை பணியாற்றியதால் பல பள்ளிகளில் படித்து 7 மொழிகளை பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டார்.

பாண்டிபஜாரில் புத்தகம் விற்ற நடிகை!! முரளி, அஜித்துக்கு ஜோடியான ஹீராவின் பேக்ரவுண்ட் | Heera Rajagopal Indian Former Actress Bio Details

சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் படித்த ஹீரா, ஒரு நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினார். பணி நேரம்போக மீதமுள்ள நேரங்களில் பாண்டிபஜார் சாலையில் புத்தகங்களை விற்றார்.

பின் மாடலிங் துறையில் இணைந்த ஹீரா, விளம்பர படங்களில் வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்து பத்திரிக்கை விளம்பரங்களுக்கு மட்டும் போஸ் கொடுத்தார். விளம்பரத்தில் ஹீராவை பார்த்த தயாரிப்பாளர் நடிக்க அழைத்துள்ளார்.

பெற்றோர்களிடம் பேசி ஹீராவை நடிக்க கூப்பிட்டபோது, படத்தில் காதல் காட்சியோ, ஹீரோவுடன் கட்டிபிடிக்கும் காட்சியோ கடைசி வரை இல்லை என்று கூறியப்பின் தான் நடிகை ஒப்புக்கொண்டு இதயம் படத்தில் ஹீரோயினாக நடித்தார் ஹீரா. நடிகர் அஜித்துடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார் ஹீரா.