என் குடும்பத்தை தப்பா பேசினா சும்மா இருக்க மாட்டேன்!! கொந்தளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா...
இந்திய சினிமாவின் நேஷனல் கிரஷ் என்று கூறப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்தப்பின்பும் நடித்து வருகிறார். பேட்டியொன்றில் தன் குடும்பத்தை தவறாக பேசினால் சும்மா இருக்க மாட்டேன் என்று கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா, அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சமீபத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் ராஷ்மிகா தன் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது ஒருநாள் இருவரும் விமான நிலையத்தில் அமர்ந்திருந்தோம், அப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் தான் முதலில் கேட்டேன். அதற்கு விஜய் தேவரகொண்டாவோ, சரி இதை 100 முறை கேள் என்று கூறியதாக ராஷ்மிகா தெரிவித்தார்.
இதை பார்த்த ரசிகர்களோ என்ன இது, ராஷ்மிகாவை இப்படி கெஞ்சவிட்டிருக்காரே, சரியான ஆணாதிக்கவாதி என்று விமர்சித்து வந்தனர். இதனையடுத்து ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரிடம் நான் 100 முறை இல்லை, 1000 முறைக்கூட கேட்பேன் என்று வாயடைக்க வைத்திருந்தார்.
என் குடும்பத்தை தப்பா பேசினா
இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் ராஷ்மிகா, பொது வாழ்வில் நான் இருப்பதால் என்னைப் பற்றிய விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் என் குடும்பத்தை யாராவது தவறாக பேசினால் எனக்கு பிடிக்காது. உடனே முழு ஆக்ரோஷத்துடன் போராளி மாதிரி இறங்கிவிடுவேன். ஏனென்றால் என் குடும்பத்தினர் இத்தொழிலை தேர்வு செய்யவில்லை, அவர்கள் யாரும் பொது வெளியில் பிரபலமானவர்கள் கிடையாது.
அப்படி இருக்கும்போது அவர்களது பெயரை இழுப்பதோ, அவர்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்வதோ சரியானது கிடையாது, அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் கிடையாது என்று பதிலடி கொடுத்துள்ளார் ராஷ்மிகா.