15 வயதில் தொடங்கிய சினிமா வாழ்க்கை!! சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகைக்கு இத்தனை கோடி சொத்தா?
நடிகை ரம்பா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து பிரபலமானவர் தான் நடிகை ரம்பா. ஆந்திராவில் விஜயவாடாவில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் இருந்தை சேர்ந்த ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி.
15 வயதில் வினீத் நடித்த சர்கம் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகிய ரம்பா, அதே ஆண்டில் சம்பக்குளம் தச்சன் என்ற படத்தில் நடித்து, பின் ஆ ஒக்கட்டி அடக்கு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து முதல் வெற்றியை கண்டார்.

இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், போஜ்புரி, பெங்காலி உள்ளிட்ட 7 மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார் ரம்பா.
சொத்து மதிப்பு
முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகையான ரம்பா, 2010ல் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

டொராண்டோவுக்கு குடிபெயர்ந்த ரம்பாவிற்கு சாஷா, லாவண்யா, ஷிவின் என்ற 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது கணவரின் தொழிலிலும் தனது பங்கை அளித்து வருகிறார் ரம்பா.
பல
தொழிலில் ஈடுபட்டு வரும் ரம்பா -
இந்திரகுமார் தம்பதியின் சொத்து மதிப்பு ரூ.
2000 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.