காதலிக்கு 36, அம்மாக்கு 31 வயசு!! மகள் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யும் 62 வயது நடிகர்...
தெலுங்கு சினிமா என்றாலே அப்படி இப்படியான கதைக்களத்துடன் பிரம்மாண்ட முறையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான காட்சிகள் அமைத்திருப்பார்கள். அப்படி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான நந்தமுரி பாலக்கிருஷ்ணா படங்களிலும் வியப்பூட்டும் கதைக்களம் இருக்கும்.
சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு 12 ஆம் தேதி வீர சிம்மா ரெட்டி படம் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படத்திருக்கிறது.
அவர் படம் என்றாலே லாஜிக் மீரர்கள் எல்லைமீறி காணப்படும். அந்தவகையில் அப்படத்தின் டிரைலரில் கூட காரை நிறுத்தி பின்னால் தட்டிவிட்டு ஓடவிடுவார்.
இந்நிலையில் வீர சிம்மா ரெட்டி படத்தில் மகன் ஜெய் சிம்மா ரெட்டிக்கு, 36 வயதான நடிகை ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்து ரொமான்ஸ் காட்சியில் நடித்திருப்பார். அதேபோல் நடிகை ஹனி ரோஸ் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
ஆனால் அவருக்கு அம்மாவாக ஃபிளாஷ்பேக்கில் வீர சிம்மா ரெட்டி(அப்பா பாலகிருஷ்ணா) கதாபாத்திரத்தின் மனைவியாகவும் ஜெய் சிம்மா ரெட்டியின்(மகன் பாலகிருஷ்ணா) அம்மாவாகவும் 31 வயதான ஹனி ரோஸ் நடித்திருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
62 வயதான நடிகருக்கு 31 வயது நடிகையை எப்படி நடிக்க வைத்துள்ளது ரசிகர்களிடையே கேலி கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறது.