எத வேணாலும் காட்டுறேன்! மன்மதலீலை நடிகருடன் இப்படியொரு காட்சியில் பிரியா பவானி சங்கர்..

Ashok Selvan Priya Bhavani Shankar
By Edward Apr 21, 2022 07:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அடல்ட் சம்பந்தப்பட்ட பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இரட்டை அர்த்த வசனமும் அந்த மாதிரியான காட்சிகளும் அதிகளவில் வைத்து படத்தினை வெளியிட்டும் வருகிறார்கள்.

அப்படி மன்மத லீலை படத்திற்கு பிறகு வெளியாகவுள்ள படம் ஹாஸ்டல். இரு வருடங்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து மற்ற வேலைகள் சென்று கொண்டிருக்கும் போது கொரோனா லாக்டவுனால் படம் வெளியாவதில் தள்ளிச்சென்றது.

மன்மதலீலை படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் அசோக் செல்வன் இப்படத்திலும் நடித்துள்ளார். முழுக்க முழுக்க இரட்டை வசனங்களே படத்தில் வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தினை இப்படத்தின் டிரைலரில் இருந்தே தெரியவருகிறது.

இன்று வெளியாகிய ஹாஸ்டல் படத்தின் டிரைலரில் நடிகை பிரியா பவானி சங்கர் போல்ட்டாக நடித்துள்ளார். அதிலும் அவர் பேசிய வசனங்கள் பிரியா பவானி சங்கரா இப்படி என்று ஷாக்காகும் படி ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.