விமர்சிக்க எப்படி உங்களுக்கு உரிமை இருக்கோ..எனக்கும்!! ஹாட் ஸ்பாட் 2 இயக்குநர் ஏக்கம்..
ஹாட் ஸ்பாட் 2
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த வாரம் 23 ஆம் தேதி வெளியான படம் தான் ஹாட் ஸ்பாட் 2. இப்படம் வெளியானதில் இருந்து படத்தின் சில காட்சிகள் இணையத்தில் பரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்
அதில், ஒரு படைப்பை பற்றி விமர்சங்கள் முன் வைப்பதற்கு எப்படி பார்வையாளர்களுக்கு முழு உரிமைகள் இருக்கிறதோ, அதேபோல் ஒரு படைப்பை எப்படி வழங்கிட வேண்டும் என்பதில் படைப்பாளர்களாகிய எனக்கும் முழு உரிமை இருக்கிறது. “ஹாட்ஸ்பாட் டூ மச் படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாள் ஆகிறது.

அதற்குள் ஏன் சக்சஸ் மீட்? என்று கேட்கிறார்கள். தம்பி ராமையா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் வந்தது. ஒரு படம் பிடித்திருக்கிறது என்பதும் ஒரு படம் பிடிக்காமல் போவது என்பதும் படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களின் தனிப்பட்ட கருத்து, இதை நாங்கள் மதிக்கிறோம், வரவேற்கிறோம்.
ஆனால் பெண்ணியவாதிகள் சிலர் தற்குறித்தனமான மனப்பான்மையுடன் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் இணையத்தில் லீக்கான காட்சியை மட்டும் எடுக்காமல், முழு படத்தை பார்த்து கருத்துக்களை சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.