200 கோடியை உதறி தள்ளிய சமந்தா!! காதல் மனைவிக்கு ரூ.380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த டாப் நடிகர்..
இந்திய சினிமாத்துறை மற்றும் விளையாட்டு துறையில் சமீபகாலமாக விவாகரத்து சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சாஹல், மனைவி தனஸ்ரீ விவாகரத்து செய்து அதிர்ச்சியளித்தனர்.
ரித்திக் ரோஷன்
இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய ஆசை காதலியை விவாகரத்து செய்து ஜீவனாம்சமாக ரூ. 380 கோடி வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரித்திக் ரோஷன் தான் அது. கடந்த 2000 ஆம் ஆண்டு சூசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்த ரித்திக், 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
ரூ. 380 கோடி ஜீவனாம்சம்
அதன்பின் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மகன்கள் இருந்தும் 14 ஆண்டு திருமண வாழ்க்கையை விவாகரத்து செய்து முறித்துக்கொண்டனர். விவாகரத்து பெற்றாலும் இருவரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
தன்னுடைய முன்னாள் மனைவி சூசன் கானுக்கு ரித்திக் ரோஷன் ரூ. 380 கோடி ஜீவனாம்சமாக கொடுத்துள்ளாராம். ஆனால் இதுகுறித்து ரித்திக் - சூசன் இருவரும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.