திரிஷாவின் கடைசி படம் எது..இனி நடிக்கமாட்டாரா? வெளியான தகவல்..

Trisha Gossip Today Tamil Actress Actress
By Edward Mar 18, 2026 08:45 AM GMT
Report

நடிகை திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் திரிஷா, சமீபகாலமாக பேசுபொருளாகினார்.

திரிஷாவின் கடைசி படம் எது..இனி நடிக்கமாட்டாரா? வெளியான தகவல்.. | Actress Trisha Stop To Act Gossips News

அதற்கு காரணம், விஜய்யை விவாகரத்து செய்கிறேன் என்றும் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் என் கணவர் இருக்கிறார் என்றும் கூறி அவரது மனைவி சங்கீதா மனுதாக்கல் செய்த, அடுத்த வாரத்திலேயே, விஜய்யுடன் ஜோடியாக திரிஷா திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

கடைசி படம்

இந்த விஷயம் பெரியளவில் பேசப்பட்டு வந்த நிலையில், திரிஷா சினிமாவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திரிஷா அறிமுகமாகிய 1999ல் இருந்து இதுவரை 75 படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

திரிஷாவின் கடைசி படம் எது..இனி நடிக்கமாட்டாரா? வெளியான தகவல்.. | Actress Trisha Stop To Act Gossips News

கடந்த 3 மாதங்களுக்கும் மேல் புதுபடங்களில் திரிஷா எதிலும் ஒப்பந்தமாகவில்லையாம். தமிழில் சூர்யாவின் கருப்பு, தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வரம்பரா, மலையாளத்தில் மோகன்லாலின் ராம் போன்ற படங்களில் நடித்துள்ளார் திரிஷா.

இப்படங்களின் படப்பிடிப்பு முடித்துவிட்டு ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இதன்மூலம் இனி திரிஷா படங்களில் நடிக்க மாட்டார் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.