பணத்தாசையால் நண்பருடன் பகிர ஒரு இரவுக்கு விலைபேசிய கணவர்? விவாகரத்து பெற்ற பிரபல நடிகை..
இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. அது சினிமா வட்டாரத்தில் அதிகளவில் இருப்பதாக பலர் மீடூ மூலம் கூறி வருகிறார்கள். திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கரிஷ்மா கபூர். 90, 2000-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் கரிஷ்மா.
சஞ்செய் கபூரை திருமணம் செய்து கொண்ட கரிஷ்மா, சில ஆண்டுகளில் அவரது உண்மை முகம் தெரிந்தது என்று கூறியுள்ளார். சஞ்சய் கபூருக்கு எப்போதுமே பணத்தின் மீதுதான் குறி எனவும், பணத்திற்காக ஒருமுறை தேனிலவு செல்லும் போது தன்னுடைய நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக அவரது நண்பரிடம் சஞ்சய் கபூர் மிகப்பெரிய தொகையை விலையாக பேசியிருந்தாராம். மேலும் சஞ்சய் கபூரின் தாயார் ஒரு ராட்சசி எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இருவரும் சேர்ந்து தன்னை கொடுமைப் படுத்தியது கொஞ்ச நஞ்சம் இல்லை என கண் கலங்கிவிட்டார் கரிஷ்மா கபூர்.
ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் 2012ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து, கிட்டத்தட்ட 13 வருட இல்லற வாழ்க்கைக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து கிடைத்துள்ளது.
தற்போது 46 வயதான கரிஷ்மா கபூருக்கு சமீரா கபூர் என்ற மகளும், கியான் ராஜ் கபூர் என்ற மகனும் இருக்கிறார்கள். சஞ்சய் கபூர் மீண்டும் 2018 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.